காலி கோட்டையிலுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தை அகற்ற மகஜர்

432 0

வரலாற்றுச் சிறப்பு மிக்க காலி கோட்டை வளாகத்திலுள்ள காலி பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தை பொலிஸ் நுாதனசாலையாக  அமைக்குமாறு காலி உரிமைகளுக்கான மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

காலி மாவட்டப் பொறுப்பதிகாரி காரியாலயத்தில் இதற்கான வேண்டுகோளை அவ்வமைப்பு விடுத்துள்ளது. காலி உரிமைகள் மன்றம் நடாத்திய மாதாந்த ஒன்றுகூடலில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மகஜர் நேற்றைய தினமே பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலி கோட்டையில் புராதன மாணிக்க விற்னை நிலையங்கள் பலவும் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் மற்றும் பல வியாபார நிலையங்களும் அமையப் பெற்றுள்ளன. இந்தக் கடைகள் அமையப் பெற்றுள்ள கடைகளில் பெரும்பாலானவை முஸ்லிம்களுடையவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கோட்டைப் பகுதியிலுள்ள பொலிஸ் பாதுகாப்பைத் தளர்த்துவது கோட்டைக்குள் வசிக்கும் முஸ்லிம்கள் மற்றும் அவர்களது பொருளாதார நிலையங்கள் என்பவற்றுக்குள்ள பாதுகாப்புக்கள் எதிர்காலத்தில் குறைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

ஆலிம்களை உருவாக்கும் புராதன அரபுக் கல்லூரி, மஸ்ஜித்கள், முஸ்லிம் குடியிருப்புக்கள் என்பன காலி கோட்டை அமையப் பெற்றுள்ள பகுதிக்குள் அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment