சிறையில் அடைக்குமாறு வேண்டுவதற்குப் பதிலாக, வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வேண்டி நிற்க ஏற்படும் -சுனில் ஹதுன்னெத்தி

356 0

எதிர்காலத்தில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களுக்குட்பட்டவர்களை சிறையில் அடைக்குமாறு வேண்டுவதற்குப் பதிலாக, வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வேண்டி நிற்க ஏற்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தி தெரிவித்துள்ளார்.

“சில் ஆடை” மோசடி தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனுஷ பெல்பிட்ட, லலித் வீரதுங்க ஆகியோர் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு விட்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment