இலங்கை அரசாங்கத்திடமிருந்து பணம்பெற்ற குற்றஞ்சாட்டை நிராகரித்தார் பிரிடிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்

213 0

இலங்கை அரசாங்கத்திடமிருந்து ஒரு லட்சம் ஸ்ரேலிங் பவுண்சினை பெற்றார் என்ற குற்றஞ்சாட்டை பிரிடிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் இயன் பேய்ஸ்லி நிராகரித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் இலங்கைக்கு சென்றிருந்த போது அவர் செலவிட்ட தொகை குறித்து கணக்கு வெளிப்படுத்தவில்லை என ஊழல் குறித்த நடவடிக்கைகளை ஆராயும் குழு குற்றஞ்சாட்டியிருந்தது.

இதுதவிர அவர் அண்மையில் இலங்கை அதிகாரிகளுடன் வர்த்தகம் தொடர்பாக பேச்சுவாரத்;தை நடத்தியுள்ளதாக டெய்லி டெலிகிராப் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் அவருக்கு எதிராக லண்டன் டெலிகிராப்பில் பிரசுரமான கட்டுரையினை அவர் தனது சட்டத்தரணியின் ஊடாக டுவிட்டர் மூலம் பதிலை அனுப்பியுள்ளார்.

பிரித்தானிய நாடாளுமன்ற சட்டத்திட்டங்களுக்கமைய சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது வெளிநாட்டு செலவீனம் உட்பட விபரங்களை வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment