லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி 

323 0

கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் சில் ஆடை விநியோகித்தமை தொடர்பில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு நேற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் செயாலாளர் லலித் வீரதுங்க மற்றும் தகவல்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகிய இருவரும் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ ஆலோசனையின் பேரில் இவர்கள் இருவரும் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பணிப்பாளர் நாயகம் எச்.எம்.என் .சீ தனசிங்க தெரிவித்திருந்தார்.

Leave a comment