இந்தியா யுத்தம் ஒன்றுக்கு தயாராக இருக்க வேண்டும் – இராணுவத் தளபதி

236 0

இந்தியா யுத்தம் ஒன்றுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அந்த நாட்டின் இராணுவத் தளபதி பிப்பின் ரவாட் தெரிவித்துள்ளார்.

ஃப்ரான்ஸ் ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை முரண்பாடு நீடித்து வருகிறது.

அண்மையில் சிக்கிம் பிராந்தியத்தில் ஏற்பட்டிருந்த எல்லைப் முரண்பாடு நிறைவடைந்த போதும், இந்த விடயத்தில் இன்னும் தீர்வு காணப்படவில்லை.

இந்த நிலையில், சீனா தமது எல்லையை கடந்த செயற்படுவதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்தியா எந்த தருணத்திலும் பூரண யுத்தம் ஒன்றுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a comment