மழை இன்று குறைவடைந்தாலும் நாளை அதிகரிக்கும்

212 0

நாட்டின் தென்மேற்கு பகுதிகள் உள்ளிட்ட பல மாகாணங்களில் நிலவும் மழையுடனான காலநிலை இன்று குறைவடைந்த போதிலும் நாளை அதிகரிக்கலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

பெய்துவரும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக இரத்தினபுரி மாட்டத்திற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

களுகங்கை பெருக்கெடுத்ததினால் இரத்தினப்புரி மாவட்டத்தில் சிறு வெள்ளநிலைமை ஏற்பட்டு தற்போது நீர் மட்டம் குறைவடைந்து வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இரத்தினப்புரியில் ஆயிரத்து 77 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரதத்து 57 பேர் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் மாலினி லொகுபதகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இரத்தினப்புரி மாவட்டத்தின் இரத்தினப்புரி, குருவிட, ஹெலியகொட, அயகம மற்றும் எலபாத கல்வி வலையத்திற்குற்பட்ட பாடசாலைகள் வெள்ளநீர் ஊடுறுவல் காரணமாக முடப்பட்டுள்ளது.

இதனிடையே, மில்லனிய பகுதியில் களுகங்கை பெருக்கெடுத்தமையினால் களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, புலத்சிங்ஹல, அகலவத்தை ஆகிய பகுதிகளில் கங்கையை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a comment