துறைசார் அதிகாரிகளுக்கு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட முடியாத வண்ணம் நிறைவேற்றப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகள்; தேர்தல் சட்டமூலம் தொடர்பில் மீண்டும் ஆராயுமாறு தாம் பிரதமரை கோரியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தலதாமாளிகையில் இடம்பெற்ற வழிபாடுகளின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் குறித்த விடயம் மிகவும் ரகசியமாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதனால் சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் மீளாய்வு செய்யுமாறு கோரப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

