அர்ஜூன் அலோசியஸ் இருக்கும் இடத்தை அறியமுடியவில்லை – சட்டமா அதிபர் திணைக்களம் 

5154 21

பர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் இருக்கும் இடத்தை குற்ற புலனாய்பு பிரிவினரால் அறியமுடியவில்லை என்பதை சட்டமா அதிபர் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயும் அவர் தமது கடவுச்சீட்டினை பயன்படுத்தி நாட்டில் இருந்து வெளியேறிச்சென்றுள்ளதாகவும் தகவல் எதுவும் பதிவாகவில்லை எனவும் சட்டமா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகம் தொடர்பில் மத்திய வங்கியின் உள்ளக இரகசிய தகவல்களை மிகவும் சரியாக பர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளராக அர்ஜூன் அலோசியஸ், ஏலம் இடம்பெறும் தினத்தில் அறிந்திருந்ததாக பிணைமுறி தொடர்பான ஆணைக்குழுவில் நேற்று தெரியவந்தது.

அந்த நிறுவனத்தினால் அழிக்கப்பட்டு பின்னர் மீட்டெடுக்கப்பட்ட குரல் பதிவு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக ஒலிக்க செய்யப்பட்ட போது இந்த விடயம் தெரியவந்தது.

அதுபோல் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் பர்பெசுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கசன் பலியசேனவுக்கு இடையில் இடம்பெற்ற தொலைப்பேசி உரையாடலையும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆணைக்குழு முன்னிலையில் ஒலிக்க செய்தது.

Leave a comment