பிரசன்ன ரணதுங்க்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

22904 163

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை தற்காலிகமாக விலக்கி கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க இன்று இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை வெளிநாடு செல்ல அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மீதொடமுல்ல பிரதேசத்தில் காணி துண்டொன்றை வழங்குவதற்காக 64 மில்லியன் ரூபாவை  பெற்று கொண்ட சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

 

 

 

Leave a comment