அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வெளிநாட்டுப் படைகள் களமிறங்கக் கூடாது: ஜப்பான்

255 0

வேறெந்த நாட்டினதும் கட்டுப்பாட்டிலன்றி இலங்கையின் கட்டுப்பாட்டிலேயே அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு, சுங்கத் தொழிற்பாடுகள் அமைந்திருக்க வேண்டும் என இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமா தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

கேந்திர முக்கியத்துவம் மிக்க இந்து சமுத்திரப் பகுதி சுதந்திரமாகவும் திறந்த நிலையிலும் இருப்பது முக்கியமானது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு வழங்கும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையில் ஜப்பான் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது.

இந்தவிடயத்தில் ஜப்பான் எத்தகைய கரிசனைகளைக் கொண்டிருக்கின்றது என வினவியதற்குப் பதிலளித்த ஜப்பானியத் தூதுவர், இந்திய சமுத்திரத்தை சுதந்திரமாகவும் திறந்த நிலையிலும் வைத்திருக்க வேண்டியது முக்கியமானதாகும். இந்த நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அனைத்து துறைமுகங்களும் வெளிப்படையான ரீதியிலும் திறந்த வகையிலும் இயங்க வைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

ஒரே ஒரு நாடு துறைமுகத்தை பிரத்தியேகமான முறையில் பயன்படுத்துவதை நாம் எதிர்க்கின்றோம். அதிலும் குறிப்பாக, இராணுவத் தேவைக்காக ஏனைய நாடொன்றின் துறைமுகத்தை வேறொரு நாடு பயன்படுத்துவதை நாம் எதிர்க்கின்றோம்.

அந்தவகையில், இலங்கையின் துறைமுகங்கள் குறிப்பாக, எதிர்காலத்தில் வேறொரு நாட்டின் இராணுவத்தாலன்றி அம்பாந்தோட்டை துறைமுகம் இலங்கை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என நாம் நம்புகின்றோம்.

துறைமுகத்தின் பாதுகாப்பு சுங்க நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என நம்புகின்றோம்.

கேந்திர முக்கியத்துவம் மிக்க திருகோணமலைத் துறைமுக அபிவிருத்தி தொடர்பாக இந்திய, இலங்கை அரசுகளுடன் பேச்சு நடத்தி வருகின்றோம் என்றார்

Leave a comment