20வது – மேல் மாகாண சபையில் நிறைவேற்றம்

416 0

20வது திருத்த சட்டமூலத்தின் விவாதத்தை ஒத்திவைப்பதற்கான யோசனை இரண்டாவது முறையாகவும் மேல் மாகாண சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த யோசனை 77க்கு 5 என்ற வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபையில் இந்த சட்டமூல அங்கீகார யோசனை இன்று முற்பகல் முன்வைக்கப்பட்டு தற்போது விவாதம் இடம்பெற்று வருகிறது.

இதற்கிடையில் 20வது அரசியல் திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் மீண்டும் எதிர்வரும் ஏழாம் திகதி கிழக்கு மாகாண சபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர்; நஸீர் அஹமட் தலைமையில் கட்சித் தலைவர்களிடையே கலந்துரையாடியதன் அடிப்படையில்; சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பிலான விவாதத்தின் பின்னர் இதன் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.

Leave a comment