வடகொரியா சோதனை – ஐ.நா கவலை

220 0
வட கொரியா நடத்திய அணு குண்டு பரிசோதனை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அணு ஆயுத கண்காணிப்பகம் கவலை வெளியிட்டுள்ளது.
சமீப காலமாக வடகொரியா 5 தடவை ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.
இந்நிலையில், வட கொரியா சக்திவாய்ந்த அணு குண்டினை பரிசோதித்துள்ளது.
இதன் விளைவாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்திலையில், கடந்த 2006ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வடகொரிய 6 தடவைகள் அணு குண்டு சோதனை நடத்தியுள்ளதாகவும் அவை மிகுந்த கவலை அளிக்கும் விதமாக உள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Leave a comment