
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் சில குற்றங்கள் குறித்து தாம் சாட்சியமளிக்க தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அண்மையில் தெரிவித்தார்.
இதனிடையே, இறுதி போரின் போது இடம்பெற்ற சில குற்றங்களுடன் ஜகத் ஜயசூரிய தொடர்புபட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

