மாத்தளை பிரதான வீதியின் பன்னம்பிடிய பிரதேசத்தில் விபத்தொன்றில் ஒருவர் பலி 11 பேர் காயம்

660 169

தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் பன்னம்பிடிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் பலியானதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

பேருந்து ஒன்றும் வான் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவர்கள் திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

மரண இல்லம் ஒன்றிற்கு சென்று வீடு திரும்பும் வழியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதனிடையே, மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி ஆரையம்பதி நகரத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியானார்.

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில், வீதியில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது சிற்றூர்ந்து ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது உயிரிழந்தவர் 53 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

There are 169 comments

Leave a comment

Your email address will not be published.