ஜப்பானின் நிதியுதவியின் கீழ் கண்டிப் பிரதேசத்தில் தொழிற்பேட்டை – ரணில்

211 0

ஜப்பானின் நிதியுதவியின் கீழ் கண்டிப் பிரதேசத்தில் தொழிற்பேட்டை ஒன்றை ஆரம்பிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் எதிர்கால சமூகத்தினரை அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்ய முடியும் என பிதமர் குறிப்பிட்டுள்ளார்.

குருநாகல் மகுறு-ஒய வத்த என்ற இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய தேசிய பாடசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

நாட்டின் கைத்தொழில் துறையில் பாரிய அபிவிருத்தியை தற்பொழுது காணக்கூடியதாக இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், எதிர்காலச் சமூகத்தினருக்காக நாட்டில் பாரிய பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு சமகால அரசாங்கம் அடிப்படையான நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, குருநாகல் மாவட்டத்தில் தாழிற்பேட்டை ஒன்றும் சிலாபம் பிரதேசத்தில் சுற்றுலா வலயமொன்றும் ஆரம்பிக்கப்படும் எனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Leave a comment