இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இந்தப் போட்டி நடைபெறும்.
4 க்கு 0 என்ற அடிப்படையில் தொடரைக் கைப்பற்றியுள்ள இந்திய அணி, இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றறும் எதிர்ப்பார்ப்புடன் நாளை களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இரண்டு போட்டிகளுக்கான தடை நிறைவு பெற்றுள்ளதையடுத்து, இலங்கை கிரிக்கட் ஒருநாள் அணியின் தலைவர் உபுல் தரங்க நாளைய போட்டிக்கு அணிக்குத் தலைமை தாங்க உள்ளார்.
சொந்த மண்ணில் ஒருநாள் தொடரையும் முழுமையாக இழப்பதை தவிர்க்கும் நோக்கில் இலங்கை அணி பயிற்சிகளை மேற்கொள்வதுடன், வியூகங்களை வகுத்து களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

