ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் உயிருடன் இருக்கலாம் – அமெரிக்க இராணுவம்

246 0

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவரான அபு பகர் அல் பகுதாதி உயிருடன் இருக்கலாம் என அமெரிக்க இராணுவ உயர் அதிகாரியொருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அவரின் இந்தக் கருத்தானது, கடந்த மே மாதம் சிரியாவில் தாம் மேற்கொண்ட தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார் என ரஷ்யா வெளியிட்டுள்ள கருத்துடன் முரண்படுவதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஈராக் அல்லது சிரியாவின் பின்தங்கிய பகுதிகளின் எல்லைப் பிராந்தியத்தில் அவர் மறைந்திருக்காலம் என ஐ.எஸ்.ஐ.எஸ் எதிர்ப்பு கூட்டணியின் கொமாண்டர் ஜெனரல் ஸ்டீபன் தௌன்சென்ட் தெரிவித்துள்ளார்.

சிரியா மற்றும் ராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக பாரிய தாக்குதல்கள் தொடரந்தும் இடம்பெற்றதனையடுத்து, அவர் அங்கிருந்து வெளியேறியிருக்கலாம்.

எனினும், தற்போது அவருடைய இருப்பிடம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், ஐ.எஸ். இற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தரப்பினர், 2 ஆயிரம் பேர்வரை அவர்களின் கோட்டையாக கருதப்படும் இடங்களை சுற்றிவளைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் திகதி வெளியிடப்பட்ட காணொளிக் காட்சியில் ஐ.எஸ். தலைவர் மொசூல் நகரில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டமை காட்சிப்படுத்தப்பட்டிருந்நதது.

அத்துடன், அவருடைய குரல் பதிவு செய்தி கடந்த வருடம் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி இறுதியாக வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment