பொகவந்தலாவ ஆல்டி தோட்டத்தில் 08 பெண் தொழிலாளா்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா்
பொகவந்தலாவ ஆல்டி கிழ்பிரிவு தோட்டத்தில் இன்று கொழுந்து பறித்து கொண்டிருந்த 08பெண் தொழிலாளர்களே குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனா்.
குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் ஒரு பெண் தொழிலாளருக்கு அதிகமான குளவிகள் தாக்கியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளா் தெரிவித்தாா்.
தேயிலை மரத்துக்கு அடிபகுதில் இருந்த குளவிக் கூடு கலைந்ததன் காரணமாகவே இச் சம்பவம நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

