பேப்பர்ச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்துடன் பிரதான கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட நபரான நுவன் சல்காதுவை கைதுசெய்ய அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதற்கான அனுமதியை வழங்குமாறு, குற்றப்புலனாய்வு திணைக்களம் கோரியுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதி, தெரிவித்துள்ளார்.
பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இதனை அவர் இன்று கூறியுள்ளார்.

