இலங்கையில் 3 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில்

1777 65
இலங்கையில் வறட்சி காரணமாக 3 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் உணவு பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 ஐக்கிய நாடுகள் சபை இதனைத் தெரிவித்துள்ளது.அத்துடன் இந்த ஆண்டு குடிநீர் சேமிப்பும் மிகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இலங்கைக்கு, சீனா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, தென்கொரியா போன்ற நாடுகளில் இருந்து வறட்சி உதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.அத்துடன் அந்த நாடுகள் இலங்கையில் நீர்முகாமைத்துவம், அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றுக்கும் உதவியளித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Leave a comment