ரயன் ஜயலத்தின் விளக்கமறியல் நீடிப்பு!

360 0

பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத்தை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாளைய தினம் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத், கொழும்பு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் கடந்த 18ஆம் திகதி முன்னிலையாகியிருந்தார்.

மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு கடந்த 10ஆம் திகதி, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

நீதிமன்றத்தில் முன்னிலையாகாமை காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத்தை கைதுசெய்ய முயன்றபோது, பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

வெள்ளை வேனில் சிவில் உடையில் வந்த காவல்துறையினர் அவரை கைதுசெய்ய முயற்சித்தமையால் இந்த பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.

இது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க, இது தொடர்பில் அறிக்கையொன்றை காவல்துறைமா அதிபரிடம் கேட்டிருந்தார்.

கைதுசெய்ய சென்ற சம்பவம் மற்றும் அதன்போது காவல்துறையினர் கடைபிடித்த நடைமுறைகள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டிருந்தது.

இது இவ்வாறு இருக்க, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரயன் ஜயலத், இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகியபோது, நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a comment