பழைய கெசட் இயந்திரம் வெடிப்பு: சிறு குழந்தை படுகாயம்

373 0
மாலபே பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சிறு குழந்தை ஒன்று காயமடைந்துள்ளது.

கடுவளை வீதி – மாலபே பகுதியிலுள்ள ஏசி திருத்தும் நிலையம் ஒன்றிற்கு முன்னால் குவிக்கப்பட்டிருந்த குப்பையில் இருந்து, எடுக்கப்பட்ட கெசட் இயந்திரமே இவ்வாறு வெடித்துள்ளது.

அதனை, பயன்படுத்த முடியுமா என பரிசோதிக்க மின்சாரத்துடன் தொடர்புபடுத்திய வேளையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதனால் எரிகாயங்களுக்கு உள்ளான சிறு குழந்தை முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அரச இரசாயன பகுப்பாய்வாளரின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

Leave a comment