பொலிஸ் சார்ஜன் உட்பட புதையல் தோண்டிய 10 பேர் கைது

345 0

நவகத்தேகம பிரதேசத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புதையல் தோண்டிய ஓய்வு பெற்ற பொலிஸ் சார்ஜன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கெதரவெவ கிராம சேவகர் பிரிவில் தரணயாகொட – கொஹோம்பயாய வனப்பகுதியில் குறித்த சந்தேகநபர்கள் கைதாகினர்.

பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபர்களை கைது செய்த தருணத்தில் அவர்கள் புதையலை தோண்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

அவர்களிடமிருந்து பூஜைப் பொருள்கள் மற்றும் புதையல் தோண்டுவதற்கான உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அதில் 8 பேர நவகத்தேகமவைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றையவர்கள் ஆணமடுவை மற்றும் நொச்சியாகம பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment