ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் போலீசார் மற்றும் பொதுமக்கள் உள்பட 13 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் போலீசார் மற்றும் பொதுமக்கள் உள்பட 13 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில், ஆப்கான் ராணுவத்தினருடன், அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணி படையினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் நவா மாவட்டத்தில் ஹெல்மண்ட் பகுதியில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். அவர்கள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை பொதுமக்கள் கூடிய இடத்தில் வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் போலீசார் மற்றும் பொதுமக்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், போலீசாரை குறிவைத்து தீவிரவாதிகள் இந்த தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறோம். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

