அமெரிக்க அதிபரையும் தினகரன் நீக்கிவிடுவார்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்

437 0

அமெரிக்க அதிபர் டிரம்பை கூட தினகரன் நீக்கி விடுவார். இது தொடர்பாக பிரேக்கிங் நியூஸ் வரும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக பதில் அளித்துள்ளார்.

பொன்னேரி அருகேயுள்ள பஞ்சட்டியில் வருகிற 2-ந்தேதி அரசு சார்பில் எ.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் டி.ஜெயகுமார் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கேள்வி:- சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை டி.டி.வி. தினகரன் நீக்கியுள்ளாரே?

பதில்:- அமெரிக்க அதிபர் டிரம்பை கூட தினகரன் நீக்கி விடுவார். இது தொடர்பாக பிரேக்கிங் நியூஸ் வரும்.

கேள்வி:- எடப்பாடி பழனிசாமி அதரவு மாவட்ட செயலாளர்களை தினகரன் தொடர்ந்து நீக்கி வருகிறாரே?

பதில்:- அவருக்கு புத்தி பேதலித்து விட்டது. புத்தி பேதலித்தால் விபரீதமான எண்ணம் வரும். இதை சமஸ்கிருதத்தில் ‘விநாசகாலே விபரீத புத்தி’ என்று சொல்வார்கள். அழிவுக்கான ஆரம்பம் தொடங்கிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment