ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் மூகாம்பிகை கோயில் விஜயம் இரத்து.!

215 0

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் கொல்லூர் மூகாம்­பிகை கோயி­லுக்­கான விஜயம் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. மூன்று நாள் விஜயம் மேற்­கொண்டு இந்­தி­யா­வுக்கு சென்­றுள்ள பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று கொல்லூர் மூகாம்­பிகை கோயி­லுக்கு வழி­பா­டு­க­ளுக்­கென செல்­ல­வி­ருந்த நிலையில் சீரற்ற கால­நி­லை­யினால் குறித்த விஜயம் இரத்து செய்­யப்­பட்­ட­தாக இந்­தி­யாவின் உடுப்பி மாவட்ட பிரதி ஆணை­யாளர் பிரி­யங்க மேரி தெரி­வித்­துள்ளார்.

ரணில் விக்கி­ர­ம­சிங்க 3 நாள் பய­ண­மாக இந்­தி­யாவில் பெங்­க­ளுருக்கு உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக சென்­றுள்ளார். இந்­நி­லையில் கொல்லூர் மூகாம்­பிகை  கோயிலில்  நடக்கும் பூஜையில் நேற்று 11 மணிக்கு கலந்­துக்­கொள்­வ­தாக இருந்த நிலையில் கொல்லூர் ஸ்ரீபூர் பிந்தூர் ஆகிய பிர­தே­சங்­களில் கடும் மழை பெய்­த­மையால் பெங்­க­ளு­ரி­லி­ருந்து விமானம் மூல­மாக செல்வது கடினம் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க குடும்­பத்­தி­ன­ருடன் விமானம் மூலம் பெங்­க­ளு­ருக்கு சென்­றி­ருந்தார். தனியார்  நட்­சத்­திர ஹோட்­டலில்  தங்கும் அவர், நேற்று நடந்த எந்­த­வொரு நிகழ்ச்­சி­யிலும்  பங்­கேற்­க­வில்லை.  இந்­நி­லையில் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க தங்­கி­யி­ருக்கும் ஹோட்டல் உள்­ளிட்ட பகு­தி­களில் பலத்த பொலிஸ் பாது­காப்பு வழங்கப்­பட்­டுள்­ள­தாவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா  உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரதிநிதிகளை சந்தித்து அவர் பேசுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment