தன்சானியாவில் உணவின்றி தவிக்கும் 3 லட்சத்து 20 ஆயிரம் அகதிகளுக்கு உணவளிக்க உலக நாடுகளிடம் ஐக்கிய நாடுகள் சபை உதவி கோரியுள்ளது.
நிதி உதவிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளின் காரணமாக வடமேற்கு தான்சானியாவில் வாழும் குறித்த அகதிகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அகதிகளின் உணவு மற்றும் சத்துணவுத் தேவையை அவசரமாக எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
அதற்காக இந்த ஆண்டு டிசம்பருக்குள் 23.6 மில்லியன் டொலர் பணம் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தெற்கு சூடானின் 2 மில்லியன் அகதிகள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், அவர்களுக்காக உலக நாடுகளிடம் ஐக்கிய நாடுகள் சபை ஏற்கெனவே உதவி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

