தொடரை கைப்பற்றியது இந்தியா

310 0

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டித் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது.

கண்டி – பல்லேகல மைதானத்தில் நேற்று பகழிரவு ஆட்டமாக இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணியிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 217 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் லஹிரு திரிமன்னே 80 ஓட்டங்களை ஆகக்கூடுதலாக பெற்றார்.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பில், பும்ரா 10 ஓவர்களில் 27 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதையடுத்து, 218 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 45.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் ரோஹிட் சர்மா 124 ஓட்டங்களையும், மஹேந்திர சிங் டோனி 67 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனர்.

இந்த வெற்றியினூடாக 5 போட்டிகள் கொண்ட தொடரை 3 க்கு 0 என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியது.

இதேவேளை, போட்டியில் வெற்றிக்காக இந்திய அணி, 8 ஓட்டங்களை மாத்திரமே பெற இருந்தபோது இலங்கை அணி ரசிகர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

இதனால், போட்டி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, இந்திய அணி வெற்றி பெற்றது.

 

 

 

Leave a comment