ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை இடைநிறுத்தியுள்ளதாக லெபனான் அறிவித்துள்ளது.
இதன்மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள லெபனான் இராணுவத்தினரை விடுவிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்த யுத்த நிறுத்த அறிவிப்பு சிரியாவின் வடகிழக்கு எல்லையில் வைத்து வெளியிடப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணி முதல் இந்த யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் 9 லெபனான் இராணுவத்தினர் பணையக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

