ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் மேலும் இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவர கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அமைச்சர்களின் அமைச்சுக்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் இந்த அமைச்சர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கையில்லா தீர்மான யோசனை ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் இரண்டு அமைச்சர்களுக்கு எதிராகவே கொண்டு வரப்படவுள்ளதாகவும் இந்த அமைச்சர்கள் தொடர்பில் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவினருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளின் போது நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்படும் என கூட்டு எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

