ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு நுழைவு அனுமதி மறுப்பு!

415 0
கடந்த வருடத்தில் ஆயிரத்து 300 க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் பிரஜைகளுக்கான நுழைவு அனுமதி வழங்கப்படுவதற்கு முன்னர், ஐ.எஸ் அமைப்புடனான தொடர்புகள் குறித்து உறுதிப்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு சர்வதேச ரீதியாக ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலை அடுத்தே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் நுழைவு அனுமதி மறுக்கப்பட்ட விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விபரங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment