கம்பஹா – மனுவாங்கொட – கமன்கெதர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி தந்தை மற்றும் மகனை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 3 பேரும் அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை இன்று மினுவாங்கொட மேலதிக நீதவான் சிசிர விஜயசூரிய முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் 15 பேரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொட காவல்துறை, நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருந்தது.

