கிளிநொச்சி கிருஷ்ணபுரம் பகுதியில் வர்த்தக நிலையத்தில் தீ – இளம் குடும்ப பெண்படுகாயம்

337 0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள கிருஷ்ணபுரம் பகுதியில் நடார்த்தப்பட்டு வந்த வர்த்தக நிலையத்தில் இன்று பிற்பகல் பரவிய தீ காரணமாக இளம் குடும்ப பெண் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் குறித்த பெண் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது குறித்த தீ பரம்பல் இடம்பெற்றுள்ளது. வேகமாக பரவிய தீயினால் கடையில் இருந்த பொருட்கள் முழுமையாக தீக்கிரையானதுடன், வீட்டு பாவனை பொருட்கள் உள்ளிட்டவையும் தீக்கிரையாகியுள்ளது, சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த இளம் பெண் அயலவர்களின் உதவியுடன் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதுடன், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, தீ விபத்துக்கான காரணம்தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment