அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் நேரம் வந்துவிட்டது: பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப்

214 0

பாகிஸ்தானுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா அடுக்கியுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் நேரம் வந்துவிட்டது என பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா அடுக்கியுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் நேரம் வந்துவிட்டது என பஞ்சாப் மாகாண முதல்வர் ஷாபாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெற்காசியாவுக்கான புதிய கொள்கையை சமீபத்தில் வெளியிட்டார். அதில், தாலிபான்களை ஒழித்துக் கட்டுவதற்காக ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகளை அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. தாலிபான்கள், ஹக்கானி உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் மறைமுகமாக உதவுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படும் பட்சத்தில் கடும் விளைவுகளை பாகிஸ்தான் எதிர்கொள்ள வேண்டிவரும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரரும், பஞ்சாப் மாகாண முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப், அமெரிக்காவுக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பாகிஸ்தான் நாட்டுக்கு இதுவரை செய்து வந்த உதவிகளுக்காக அமெரிக்காவுக்கு நன்றி. அமெரிக்காவுக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதுவே நமது நாட்டை முன்னேற்றுவதற்கான வழி’’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment