கண்டெய்னர் லாரிகளுக்கு இடையில் மினி பஸ் சிக்கிய விபத்தில் 8 பேர் பலி

294 0

பிரிட்டன் நாட்டில் இரு கண்டெய்னர் லாரிகளுக்கு இடையில் மினி பஸ் சிக்கிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

பிரிட்டன் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் லண்டன் நகரையொட்டியுள்ள பக்கிம்ஹாம்ஷைர் பகுதியில் உள்ள நியூபோர்ட் பேக்னல் உள்ள நெடுசாலை வழியாக சென்ற இரு கண்டெய்னர் லாரிகளுக்கு இடையில் மினி பஸ் சிக்கிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த நான்குபேர் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3.15 மணியளவில் நிகழ்ந்த இந்த கோரவிபத்தில் சிக்கிய மினி பஸ் நோட்டிங்ஹாம் நகரில் இருந்து பயணிகளை ஏற்றி வந்ததாக தெரிகிறது.

இந்த விபத்தால் M1 நெடுஞ்சாலையின் 14 மற்றும் 15 முனையங்களின் வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையை தேர்ந்தெடுக்குமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இரு லாரிகளுக்கு இடையில் சிக்கிய மினி பஸ் அப்பளம்போல் நொறுங்கி கிடந்ததாக இந்த விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment