பெண்ணொருவருக்கு இடையூறு விளைவித்த இரு மருத்துவர்கள் கைது

365 0
பெண்ணொருவருக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் கேகாலை மருத்துவமனையின் இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 அவர்கள் நேற்று இரவு கேகாலை நகரில் பெண்ணொருவருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
அதனையடுத்து குறித்த பகுதியை சேர்த்த பொது மக்களால் அவர்கள் தாக்கப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
 இதன்போது குறித்த இளம் மருத்துவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
இதனிடையே, குறித்த மருத்துவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பிலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a comment