ஆப்கானிஸ்தானில் ஹெல்மண்ட் மாகாணத்தில் தற்கொலை கார் குண்டு தாக்குதலில் 7 பேர் பலியாகி உள்ளதுடன் 42 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் குறித்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்பதாக தலிபான் தீவிரவாத அமைப்பின் பேச்சாளர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

