பிரேசில் நாட்டில் 70 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் வடக்குப் பகுதியில் உள்ள பார் மாநிலத்தில் 70 பயணிகளுடன் சென்று படகு ஆற்றின் நடுவே திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது .
உடனடியாக அங்கு வந்த மீட்புப்படையினர் தத்தளித்த பயணிகளில் 25 பேரை மீட்டுள்ளனர். 7 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படகு விபத்துக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

