உயர்தரப் பரீட்சையின் இரண்டு பரீட்சைகள் 04ம் திகதிக்கு பிற்போடப்பட்டது

207 0

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செப்டம்பர் மாதம் 02ம் திகதி நடக்க இருந்த இரண்டு பரீட்சைகளை பிற்போடுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

அன்றைய தினம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த பொது அறிவுப் பரீட்சை மற்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பரீட்சையின் பகுதி – 02 ஆகிய பரீட்சைகள் செப்டம்பர் மாதம் 04ம் திகதி நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார கூறினார்.

நாற்காட்டியில் செப்டம்பர் மாதம் 01ம் திகதியாக இருந்த ஹஜ் பெருநாள் தினம் 02ம் திகதி கொண்டாடப்பட உள்ளதாக கூறி, முஸ்லிம் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த தினம் மாற்றம் செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

அதன்படி செப்டம்பர் மாதம் 02ம் திகதி பொது அறிவுப் பரீட்சை செப்டம்பர் மாதம் 04ம் திகதி காலை 08.30 மணி முதல் காலை 11.00 மணி வரையிலும், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப பரீட்சையின் பகுதி – 02 பிற்பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரம் அன்றைய தினம் செல்லுபடியாகும் என்பதுடன், மேலதிக தகவல்கள் தேவையாயின் 1911 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார கூறியுள்ளார்.

Leave a comment