இலங்கை பிரதமர் கர்நாடகா செல்லவுள்ளார்

439 0

இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளையதினம் கர்நாடகா – கொல்லூரில் உள்ள சிறி மூகாம்பிகை அம்மன் ஆலயத்துக்கு செல்லவுள்ளார்.

பெங்களுர் சென்று அங்கிருந்து உலங்குவானூர்தி மூலம் அரசிரூர் செல்லும் பிரதமர், பின்னர் மூகாம்பிகை விருந்தினர் விடுதிக்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு அவர் மூகாம்பிகை ஆலயத்தின் மங்களார்த்தி நிகழ்வில் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருடன் பிரதமரின் பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும், இந்தியாவிற்கான உதவி உயர்ஸ்தானிகர் வீ.கிருஷ்ணமூர்த்தியும் உடன்செல்லவுள்ளனர்.

Leave a comment