யுனஸ்கோ அமைப்பின் இயக்குநர் நாயகம் பொலன்னறுவைக்கு விஜயம்

297 0

clanek_un-flag-squareஉத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ‘யுனஸ்கோ’ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி மற்றும் கலச்சார அமைப்பின் இயக்குநர் நாயகம் இரீனா பொகோவா இன்று பொலன்னறுவை சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர் பௌத்த வழிப்பாட்டு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

பின்னர் அவர் பொலன்னறுவையில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க புராதன கட்டிடங்களையும், பொலன்னறுவை சிவன் ஆலயத்தையும் பொலன்னறுவை அரும்பொருள் காட்சியகத்தையும் பார்வையிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து அவர் சீகிரியாவுக்கும் விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.