அரசாங்கம் அரசியல் அமைப்புக்கு விரோதமான செயற்படுவதாக குற்றச்சாட்டு- டளஸ் அலகப்பெரும

208 0
அரசாங்கம் அரசியல் அமைப்புக்கு விரோதமான செயற்பாட்டை முன்னெடுப்பதாக மகிந்த அணியினர் குற்றம் சுமத்தியுள்ளது.
அரசியல் அமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், ஒன்றிணைந்த எதிர்கட்சியைப் பிரதி நிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அரசாங்கம் மறைமுகமாக தமக்கேற்ற பல சரத்துக்களை அரசியல் அமைப்பில் இணைத்துள்ளது.
ஆகவே, இதுகுறித்த தாம் சபாநாயகரிடம் முறையிட்ட போது இந்த சட்டமூலம் தொடர்பில் இன்றைய தினம் வாக்கெடுப்பு நடைப்பெறாது சபாநாயகர் உறுதியளித்துள்ளார்.
ஆகவே அது தொடர்பில் கலந்துரையாட கால அவகாசம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், அவர் இவ்வாறு தெரிவித்து ஒரு மணி நேரத்தில் சபை முதல்வர் வாக்கெடுப்பு இடம்பெறும் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.
இதன்படி அரசாங்கம் நாடாளுமன்ற நிலையியல் கட்டளை சட்டத்தை மீறி செயற்படுகின்றது.
புதிய அரசியல் அமைப்பை தேர்தல் ஆணைக்குழுவிற்கோ நாடாளுமன்றத்திகோ முன்வைக்காமல் அரசியல் யாப்பிற்கு மாறாக செயற்படுகிறது எனவும் டளஸ் அலகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment