உலகிலேயே இரண்டாவதாக அதிக காலம் அதிபராக இருந்த அங்கோலா நாட்டின் தாஸ் சண்டோஸ் ஓய்வு

215 0

உலகிலேயே இரண்டாவதாக அதிக காலம் அதிபராக பதவிவகித்த அங்கோலா நாட்டின் அதிபர் தாஸ் சண்டோஸ் அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உலகிலேயே இரண்டாவதாக அதிக காலம் அதிபராக பதவிவகித்த அங்கோலா நாட்டின் அதிபர் தாஸ் சண்டோஸ் அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆப்ரிக்கா நாடான அங்கோலா போர்ச்சுகல் நாட்டின் ஆதிக்கத்திலிருந்து 1975-ம் ஆண்டில் விடுதலை பெற்றது. அந்நாட்டின் இரண்டாவது அதிபராக ஜோஸ் எடுவார்டோ தாஸ் சண்டோஸ் 1979-ம் ஆண்டு பதவியேற்றார். எண்ணெய் வளம் மிக்க அங்கோலாவின் அதிபராக 38 ஆண்டுகள் பதவிவகித்த இவர் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உலகிலேயே இரண்டாவது அதிபராக பதவிக்காலம் வகித்த தாஸ் சண்டோஸ் அந்நாட்டில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என முடிவெடுத்துள்ளார். அவருக்கு பதிலாக அவரது கட்சியைச் சேர்ந்த ஜோயோ லவுரென்கோ அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

ஜோயோ லவுரென்கோ தற்போது அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரியாக பதவி வகித்து வருகிறார். தேர்தல் கருத்துக் கணிப்புகளிலும் ஆளும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 38 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கோலா மக்கள் தங்களது புதிய அதிபரை தேர்வு செய்ய உள்ளனர்.

உலகிலேயே அதிபராக அதிக பதவிக்காலம் வகித்ததில் கியானா நாட்டின் டியோடோரோ ஒபியாங் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment