வவுனியாவில் ஆர்ப்பாட்டம்(காணொளி)

2089 0

வவுனியா, பூவரசன்குளம் கிராம அலுவலர் பிரிவு மக்கள், வறட்சி நிவாரணம் ஏன் வழங்கப்படவில்லை என, கிராம அலுவலரின் அலுவலகத்திற்கு கேட்க சென்ற போது, அவர்களை அநாகரிகமாக பேசி, கிராம அலுவலர் விரட்டியமையால் மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பூவரசன்குளம் கிராம அலுவலர் பிரிவில் 600 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், நூற்றுக்கும் குறைவான குடும்பங்களுக்கே வறட்சி நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
அதற்காக தெரிவு செய்யப்பட்ட மக்களை, நிவாரண வேலைக்காக கிராம அலுவலர் அழைத்திருந்திருந்தார்.
வறட்சி நிவாரணத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்கள் தம்மை ஏன் புறக்கணித்ததாகவும், தாமும் அப்பகுதியில் வசிக்கின்றோம் எனவும், தமக்கும் வறட்சி தானே என கிராம அலுவலரின் அலுவலகத்திற்கு சென்று கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து அப்பகுதி கிராம அலுவலர், மக்களை பார்த்து, நாம் பெயர் விபரங்களை பதிவு செய்யும் போது எங்கு இருந்தீர்கள் என்பதுடன், தகாத வார்த்தைப் பிரயோகத்தில் ஈடுபட்டார்.
அதன் காரணமாக மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டமையால், பூவரசன்குளம் பொலிசாரை அழைத்து மக்களை அலுவலகத்தில் இருந்து வெளியேற்ற முற்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் குறித்த கிராம அலுவலர் அலுவலகம் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை இது தொடர்பாக அறிய, கிராம சேவையாளரிடம் ஊடகவியலாளர்கள் சென்ற போது, வெளியே செல்லுமாறு கூறியதுடன் அநாகரீகமாகவும் நடந்து கொண்டார் என எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a comment