கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு மலையக மக்கள் ஒன்றியம் (காணொளி)

10730 89

கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வடக்கு கிழக்கு மலையக மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கும் நோக்கில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஆதரவாளர்கள் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கலந்தரையாடலில் 34 பேர் கலந்துகொண்டனர்.
இதன் போது பிரதேசங்களுக்கான இணைப்பாளர்கள் தெரிவு மாத்திரமே மேற்கொள்ளப்பட்டது.
ஒரு இலட்சத்து 38 ஆயித்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் கிளிநொச்சி மாவட்டத்தில், 44 வீதமானவர்கள் மலையக சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment