நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் இணக்கம் வெளியிட்டுள்ளது.அமைச்சர் பைஸர் முஸ்தபாவுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று நடத்திய பேச்சுவார்த்தையின்போது இந்த இணக்கம் வெளியிடப்பட்டதாக அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

