தனக்கு அதிகாரம் இருந்திருந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்திருப்பேன் – சுவாமிநாதன்

293 0

தனக்கு அதிகாரம் இருந்திருந்தால் அரசியல் கைதிகளை விடுதலை செய்திருப்பேன் என சிறைச்சாலைகள் அமைச்சர் எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருக்கும் அரசியல் கைதிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்  போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நீதி அமைச்சின் மூலமாக தான் இதற்கு உரிய தீர்வு காணப்பட முடியும். நான் பல தடவைகள் நீதி அமைச்சிடம் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளேன்.

மேலும் அரசியல் கைதிகள் தொடர்பில் சட்ட அரசாங்க அதிபருடன் பேசி இவர்கள் ஏன் இன்னும் சிறைச்சாலையில் அடைத்து  வைக்கப்பட்டுள்ளார்கள் என கேள்வி எழுப்புவேன்.” எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a comment