300 ஏக்கர் நிலப்பரப்பு பங்களாதேசிற்கு வழங்கப்படாது

311 0

மஹாஇலுப்பள்ளம பகுதியில் உள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பானது பங்களாதேசிற்கு விற்கவோ ,குத்தகைக்கோ வழங்கப்படாது என அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த 300 ஏக்கர் நிலப்பரப்பு 150 வருட குத்தகைக்கு பங்களாதேசின் தனியார் நிறுவனம் ஒன்றிட்கு வழங்கப்படுவது குறித்து வெளிவரும் வதந்திகள் தொடர்பில் பொதுமக்களை தெளிவுப்படுத்தும் கலந்துரையாடல் இன்று அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வருடமொன்றிட்கு விதைகளை இறக்குமதி செய்வதற்கு இலங்கை 1400 மில்லியனை செலவிடுவதாகவும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

பங்களாதேசின் பிரபல விதை உற்பத்தி நிறுவனத்துடன் விதை உற்பத்தி தொடர்பிலான தொழிநுட்ப விடயங்களை பறிமாறிக்கொள்ளும் நடவடிக்கையே முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment