தலாக்’ கூறி, மனைவியரை விவகாரத்து செய்யும் நடைமுறை அரசியல் யாப்புக்கு முரணானது – இந்திய உயர் நீதிமன்றம்  

307 0

இந்தியாவில் இஸ்லாமியர்கள் ‘தலாக்’ என்ற வார்த்தையைக் கூறி, தமது மனைவியரை விவகாரத்து செய்யும் நடைமுறை அரசியல் யாப்புக்கு முரணானது என்று இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் இணைந்து, குறித்த நடைமுறையை ரத்து செய்யுமாறு இந்திய உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீண்டகாலமாக விசாரணை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்றையதினம் ஐந்து நீதியரசர்களைக் கொண்ட இந்திய உயர் நீதிமன்றத்தின் குழு, இந்த தடைமுறைக்கு தடை விதித்தது.

அண்மைக்காலமாக ஸ்கைப் மற்றும் வட்சப் போன்ற சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் தலாக் என்று தமது மனைவியருக்கு தெரிவித்து பல ஆண்கள் விவாகரத்து வழங்கியுள்ளனர்.

இவ்வாறான நிலைமையை தடுக்கும் வகையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a comment