கதிர்காமம் பிரதான ஆலயம் இன்று காலை ஏற்பட்டிருந்த குழப்பநிலையை அடுத்து மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் கதவை திறப்பதற்கான திறப்பினை, ஆலய பஸ்நாயக்க நிலமே எடுத்துச் சென்று, உரிய நேரத்தில் கொண்டு வராததன் காரணமாக இன்றைய அதிகாலைப் பூஜை இடம்பெற்றிருக்கவில்லை.
எனினும் தாம் திறப்பை கொண்டுவந்த போதும், பூஜகர்கள் கதவைத் திறக்க அனுமதிக்கவில்லை என்று பஸ்நாயக்க நிலமே குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனால் பக்தர்களும் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.
எவ்வாறாயினும், தற்போது ஆலயம் திறக்கப்பட்டு, வழமையான பூஜைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

